Poems of Swappnam

Last post of mine was on the music of 'Swapnam'. The tunes have been set to Shaivite poetry. I collect the poems here for your quick reference. I give the English where available and Tamizh version when English version is not available.

1. 'Kozhi Silamba':

திருஎம்பாவை

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : கோழி சிலம்ப - கோழி கூவ, எங்கும் குருகு சிலம்பும் - எவ்விடத்தும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; ஏழில் இயம்ப - வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எங்கும் வெண்சங்கு இயம்பும் - எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; கேழ்இல் பரஞ்சோதி - ஒப்பற்ற மேலான ஒளிப்பிழம்பானவனும், கேழ்இல் பரங்கருணை - ஒப்பற்ற மேலான கருணையுடையவனுமான சிவபெருமானது, கேழ் இல் விழுப் பொருள்கள் - நிகரில்லாத உயர்ந்த புகழ்களை, பாடினோம் - நாங்கள் பாடினோம்; கேட்டிலையோ - அவற்றை நீர் கேட்கவில்லையா? வாழி - வாழ்வாயாக; ஈது என்ன உறக்கமோ - இது எத்தகைமையான தூக்கமோ! ஆழியான் - பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், அன்புடைமை ஆமாறும் - இறைவனிடத்தில் அன்புடையனான திறமும், இவ்வாறோ - இப்படித்தனோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை - பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய, ஏழை பங்காளனையே - உமை பாகனையே, பாடு - பாடுவாயாக.
Source: http://www.tamilvu.org/slet/l4180/l4180son.jsp?subid=2325 


2. Koovina Poonkuyil

திருப்பள்ளியெழுச்சி



கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

Source: Wikipedia

3. Kadhar Kuzhaiyada (திருஎம்பாவை)

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
பதப்பொருள் : காது ஆர் குழை ஆட - காதில் பொருந்திய குழை அசையவும், பைம்பூண் கலன் ஆட - பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும், கோதை குழல் ஆட - பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், வண்டின் குழாம் ஆட - மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், சீதப்புனல் ஆடி - குளிர்ச்சியாகிய நீருள் மூழ்கி, சிற்றம்பலம் பாடி - தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருள் பாடி - வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் ஆம் ஆ பாடி - அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணமும் பாடி, சோதி திறம் பாடி - பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, சூழ் கொன்றைத்தார் பாடி - இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, ஆதி திறம் பாடி - அவன் ஆதியான தன்மையைப் பாடி, அந்தம் ஆம் ஆபாடி - அவன் அந்தமான முறையையும் அந்தம் ஆம் ஆ பாடி - அவன் அந்தமான முறையையும் பாடி, போதித்து - பக்குவ முறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை வளர்த்து எடுத்த - நம்மை வளர்த்து மேம்படுத்திய, பெய்வளை தன் - இடப்பட்ட வளையலை உடைய உமாதேவியின், பாதத் திறம் பாடி - திருவடியின் தன்மையைப் பாடி, ஆடு - ஆடுவாயாக.
Source: http://www.tamilvu.org/slet/l4180/l4180son.jsp?subid=2325 

4. Ezhisaiyai

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே  

 ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே

---  சுந்தரர், திருவாரூர்ப்பதிகம்

Source: http://vallalar.net/vallalarsongs/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D

5. Ammaiye Appa
பாடல் எண் : 3
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து காலத்தை வீணாகக் கழிக்கின்ற புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, மிக மேன்மையான சிவபதத்தைக் கொடுத்தருளின அருட்செல்வமே! சிவபிரானே! இவ்வுலகிலேயே உன்னை உறுதி யாகப் பற்றினேன், நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

திருவாசகம்-பிடித்த பத்து

Source: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8137
6. Bhajeham Bhajeham 

bhajEhaM bhajEhaM shivOhaM shivOhaM chidAnaMda rUpa shivOhaM shivOhaM ||
prasIda prabhO sarvabhUtAdivAsaM bhajEhaM bhajEhaM shivOhaM shivOhaM chidAnaMda rUpa shivOhaM shivOhaM ||
OMkAramUlaM turIyaM mahEshaM bhajEhaM bhajEhaM shivOhaM shivOhaM chidAnaMda rUpa shivOhaM shivOhaM ||
OM namaH shivAya OM namaH shivAya |||
Source: https://meerasubbarao.wordpress.com/2014/02/13/bhajeham-bhajeham-bhajeham-shivoham-lyrics/
7. Vishweswar Darishan
pallavi - staayi
vishvEshvar darsan kar cal man tum kAsI
anupallavi
vishvEshvara darsan jab kInhO bahu prEma sahit kATi karuNa nidhAn janan maraNa phAsI
antara 1
bahtI jinkI purI mO gangA pay kE samAn vA kE taT ghAt ghAt bhar rahE sanyAsI
antara 2
bhasma ang bhuj trishUl ur mE lasE nAg mAl girijA ardhang dharE tribhuvan jin dAsI
antara 3
padmanAbh kamalanayan trinayan shambhu mahEsh bhaj lE in dO svarUp rahiyE avinAshI
Source: http://www.karnatik.com/c1366.shtml
8. Pradeepta Ratnojwala
Pradeeptha rathnojjwala  kundaayai, Sphuran maha pannaga  bhooshanayai, Shivanvithaayai cha  Shivanvithaya, Nama Shivayai cha  namashivaya. 8 My salutations to both Parvathi  and Shiva, To Her with glittering ear rings  of gems, To Him who wears a great  serpent as an ornament, To Her who is divinely merged  with Shiva,And to Him who is divinely  merged with Parvathi.
Mandhara mala kali thalakayai, Kapalamalnkitha kandharaya, Divyambarayai cha  Digambaraya, Nama Shivayai cha  namashivaya. 5 My salutations to both Parvathi  and Shiva,To Her whose hair is decorated  with divine flowers, To Him who wears a garland of  skulls,To Her who dresses in great  silks, And to Him wearing the eight  directions.
Kasthurika kumkuma  charchithayai, Chitha raja puncha  vicharchithayai, Kruthasmarayai vikrutha  smaraya, Nama Shivayai cha  namashivaya. 2 My salutations to both Parvathi  and Shiva, To Her whose body is smeared  with musk and saffron, To Him whose body is smeared  with ashes of a burning ghat, To Her whose prettiness  radiates love, And to Him who destroyed the  God of love.
Source: 
http://shivabhakth.blogspot.in/

Comments

Popular posts from this blog

M S Subbulakshmi : Who misunderstood her?

One song at a time - 24. Naadamaya E Lokavella

SPB: A Musical History - Part 5: Sankarabaranam and the tryst with classical music