Poems of Swappnam
Last post of mine was on the music of 'Swapnam'. The tunes have been set to Shaivite poetry. I collect the poems here for your quick reference. I give the English where available and Tamizh version when English version is not available. 1. 'Kozhi Silamba': திருஎம்பாவை கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். பதப்பொருள் : கோழி சிலம்ப - கோழி கூவ, எங்கும் குருகு சிலம்பும் - எவ்விடத்தும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; ஏழில் இயம்ப - வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எங்கும் வெண்சங்கு இயம்பும் - எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; கேழ்இல் பரஞ்சோதி - ஒப்பற்ற மேலான ஒளிப்பிழம்பானவனும், கேழ்இல் பரங்கருணை - ஒப்பற்ற மேலான கருணையுடையவனுமான சிவபெருமானது, கேழ் இல் விழுப் பொருள்கள் - நிகரில்லாத உயர்ந்த புகழ்களை, பா